ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக தனது 41 வயதில் அறிமுகமாகி பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரவின் தாம்பே. லெக் ஸ்பின்னரான இவர், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை 33 போட்டிகளில் விளையாடிய இவர், 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக இந்த ஆண்டு நடக்கவிருந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடுவதற்கு இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனிடையே இவர் டி10 லீக் தொடரில் பங்கேற்றதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்தது.