தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பகலிரவு டெஸ்ட்: ரோஹித் அரைசதம்; நிதான ஆட்டத்தில் இந்தியா!

இங்கிலாந்து அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை எடுத்துள்ளது.

IND vs ENG, 3rd Test: India 5/0 after England crumble to 112
IND vs ENG, 3rd Test: India 5/0 after England crumble to 112

By

Published : Feb 24, 2021, 10:38 PM IST

அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.

அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது அபார பந்துவீச்சால் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக் ஜாக் கிரௌலி 53 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை தொடக்கம் தந்தது. தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அணியின் ஸ்கோரை சிறுகச் சிறுக சேர்த்தது.

பின்னர் 11 ரன்களில் சுப்மன் கில் ஆட்டமிழக்க அவரைத் தொடந்து களமிறங்கிய புஜாரா ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தது.

எனினும் 27 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 57 ரன்களுடனும், அஜிங்கியே ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் ஹசாரே: உச்சகட்ட ஃபார்மில் உத்தப்பா; கேரளா த்ரில் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details