தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அந்தோ பரிதாபம்.! எட்டு ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா! - நியூசிலாந்து இந்தியா டெஸ்ட் தொடர்

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், இந்திய அணி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.

2nd Test: Kiwis inflict India's first Test series whitewash in 8 years
2nd Test: Kiwis inflict India's first Test series whitewash in 8 years

By

Published : Mar 2, 2020, 9:56 AM IST

நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் ஆட்டநாள் இன்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது.

நேற்றைய இரண்டாம் இரண்டாம் ஆட்டநாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி இன்று 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஹனுமா விஹாரி (9), ரிஷப் பந்த் (4), முகமது ஷமி (5), பும்ரா (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில், ஜடேஜா 16 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.

நியூசிலாந்து வீரர்கள்

இதைத்தொடர்ந்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களான டாம் லாதம், டாம் பிளெண்டல் சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.

குறிப்பாக இடதுகை வீரர் டாம் லாதம் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 103 ரன்களைச் நிலையில், அவர் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, பும்ரா தனது சிறப்பான பந்துவீச்சினால், வில்லியமன்சன் ஐந்து ரன்களிலும், டாம் பிளெண்டல் 55 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் செய்து ஆறுதல் தந்தார்.

டாம் லாதம் - டாம் பிளெண்டல்

இறுதியில், நியூசிலாந்து அணி 36 ஓவர்களில் மூன்று விக்கெட்டை இழந்து 132 ரன்களை எட்டியது. ராஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோர் தலா ஐந்து ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால், நியூசிலாந்து அணி இப்போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

ஸ்கோர் சுருக்கம்:

  1. இந்தியா முதல் இன்னிங்ஸ் - 263 (விஹாரி 55, ஜேமிசன் 5-45)
  2. நியூசிலாந்து - 235 (டாம் லாதம் 51, முகமது ஷமி 4-81)
  3. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் - 124 ( புஜாரா 24, போல்ட் 4-28)
  4. நியூசிலாந்து - 132/3 ( பிளெண்டல் 55, பும்ரா 2 - 39)

இந்தப் போட்டியில் பவுலிங்கில் ஐந்து விக்கெட்டுகளும், பேட்டிங்கில் 49 ரன்களும் அடித்த நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் ஆட்டநாயன் விருதை பெற்றார்.

அதேபோல இந்த தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிம் சவுதி தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று இந்தியா நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்ததது. அதன்பின் விஸ்வரூபமெடுத்த நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வென்று இந்தியாவை ஒயிட் வாஷ்செய்துள்ளது.

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் தொடர்களில் பல அணிகளை ஒயிட்வாஷ் செய்துவந்த இந்திய அணி, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.

முன்னதாக, இந்திய அணி 2012ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியிருந்தது.

இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸை 3-0 வொயிட் வாஷ் செய்த இலங்கை!

ABOUT THE AUTHOR

...view details