தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நியூசிலாந்திடம் கம்பேக் தந்த இந்தியா! - ஜடேஜாவின் மிரட்டல் கேட்ச்

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2nd Test, Day 2: India fight back to bundle out Kiwis for 235, lead by 7 runs
2nd Test, Day 2: India fight back to bundle out Kiwis for 235, lead by 7 runs

By

Published : Mar 1, 2020, 10:08 AM IST

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவரும் நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் ஆட்டநாள் இன்று தொடங்கியது.

முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்ததிருந்த நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.

வில்லியம்சனை அவுட் செய்த மகிழ்ச்சியில் பும்ரா

ஸ்கோரில் கூடுதலாக மூன்று ரன்கள் சேர்த்த நிலையில், தொடக்க வீராங்கனை டாம் பிளெண்டல் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் பும்ரா பந்துவீச்சில் மூன்று ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

இதன்பின்னர் டெய்லர் - டாம் லாதம் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 40 ரன்களைச் சேர்த்த நிலையில், ஜடேஜா பந்துவீச்சில் டெய்லர் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

டாம் லாதம்

இதனிடையே, அரைசதம் அடித்து நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்துவந்த டாம் லாதம் 52 ரன்களில், முகமது ஷமி பந்துவீச்சில் க்ளின் போல்டானார். இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சினால் நியூசிலாந்து வீரர்களான ஹென்ரி நிக்கோலஸ் (14), பி.ஜே வாட்லிங்(0), டிம் சவுதி (0), கோலின் டி கிராண்ட்ஹோம் (23) ஆகியோர் அடுத்தடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால், நியூசிலாந்து அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து திணறியது. இந்த நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்தை 200 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்வதற்கான வாய்ப்புகள் அமைந்தன.

குறிப்பாக, நியூசிலாந்து அணி 190 ரன்களை எட்டிய நிலையில், முகமது ஷமி பந்துவீச்சில் நைல் வாக்னர் தந்த கேட்சை ஹனுமா விஹாரி நழுவவிட்டார்.

நைல் வாக்னர் கேட்ச் பிடித்த மகிழ்ச்சியில் ஜடேஜா

இது நியூசிலாந்து அணிக்கு முற்றிலும் சாதகமாக அமைந்தது. இந்த இக்கட்டான நிலையிலும் நியூசிலாந்து அணி ரன்கள் குவிக்கும் என யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கைல் ஜேமிசன் - நைல் வாக்னர் ஜோடி சிறப்பாக விளையாடியது.

இந்த ஜோடி 51 ரன்களைச் சேர்த்த நிலையில், ஜடேஜா - முகமது ஷமி இந்திய அணிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தினர்.

முகமது ஷமியின் பந்துவீச்சில் நைல் வாக்னர் அடித்த புல் ஷாட்டை, ஸ்கோயர் லெக் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஜடேஜா, ஒரே கையில் (இடது கை) எகிறிது பந்தை பிடித்ததால் நைல் வாக்னர் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து, கைல் ஜேமிசன் 49 ரன்களுக்கு முகமது ஷமி பந்துவீச்சில் அவுட்டாக நியூசிலாந்து அணி 73.1 ஓவர்களில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜேமிசன்

இதனால், ஏழு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் இந்திய அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது.

தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் மூன்று ரன்களில் ஆட்டமிழந்தார். சற்றுமுன்வரை இந்திய அணி ஏழு ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ரன்களை எடுத்து, 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பிரித்விஷா 13 ரன்களுடனும், புஜாரா நான்கு ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

ஸ்கோர் சுருக்கம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ் - 242 ( விஹாரி 55, ஜேமிசன் 5-45)

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் - 235 (டாம் லாதம் 52, முகமது ஷமி 4-81)

இதையும் படிங்க:வங்கதேசத்தை 92 ரன்களை சேஸ் செய்ய விடாமல் மிரட்டிய நியூசிலாந்து!

ABOUT THE AUTHOR

...view details