இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 36 பந்துகளில் அரைசதம் அடித்து அணிக்கு உதவினார்.
இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணி தரப்பில், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் - ஜோஸ் பட்லர் இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்தது.