டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 9ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் ஸ்ரீதர் மற்றும் கோபிநாத் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர். ஸ்ரீதர் 38 பந்துகளில் 54 ரன்களும், கோபிநாத் 40 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர்.