தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#VijayHazare2019: 17 வயதிலேயே இப்படியொரு சாதனையா? - அசத்தும் மும்பை வீரர்! - மும்பை வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை மும்பை வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

Yashasvi Jaiswal

By

Published : Oct 16, 2019, 10:08 PM IST

நடந்து கொண்டிருக்கும் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பல்வேறு வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தால் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகின்றனர். குறிப்பாக, கேரள வீரர் சஞ்சு சாம்சன் இந்தத் தொடரில் இரட்டை சதமடித்து அசத்தியிருந்தார். தற்போது அந்த வரிசையில் மும்பை அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்துள்ளார்.

பெங்களூருவில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் மும்பை - ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் 17 வயதான இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனது அதிரடியான ஆட்டத்தால் ஜார்கண்ட் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 154 பந்துகளில் 12 சிக்சர்கள், 17 பவுண்டரிகள் என 203 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இதன் மூலம், லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டியில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார். 17 வயது 292 நாட்களில் இவர் இச்சாதனையை எட்டினார். இதனால், முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் அலென் பாரோவின் சாதனை (20 வயது 276 நாட்கள்) முறியடிக்கப்பட்டது. அதேசமயம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஒன்பதாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

நடப்பு விஜய் ஹசாரே தொடரில் இவர், இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு இரட்டைசதம், இரண்டு சதம் என 504 ரன்களை குவித்து வெறித்தனமான ஃபார்மில் இருக்கிறார். கடந்தாண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் 85 ரன்கள் அடித்திருந்தார். இதனால், இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றது. மேலும், அந்தத் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்த யஷஸ்வி மொத்தம் 318 ரன்களை குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details