கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நாடுகளிலும் விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஐசிசி சார்பாக இந்த ஆண்டு நடக்கவிருந்த டி20 உலகக்கோப்பைத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு நடக்க வேண்டிய ஐபிஎல் தொடர் செப்டம்பரில் தொடங்கவுள்ளது.
தற்போது ஐபிஎல் தொடருக்கு பின்னர் இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அது அக்டோபர் மாதத்திலிருந்து ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தொடரின் அட்டவணையில் மாற்றம் நிகழலாம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் பேசுகையில், ''கரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 14 நாள் தனிமைப்படுத்தல் என்பது சுற்றுப்பயணத்தின் மொத்த நீளத்திலிருந்து குறைக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.
அந்தத் தொடர் புறப்படுவதற்கு முன்பாக அனைத்து வேலைகளும் முடித்து உறுதி செய்யப்படும். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு பின்னர் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் ஜனவரி மாதம் பங்கேற்கவுள்ளது.
அடுத்த ஆண்டுக்குள் கரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்படும் என நினைத்தாலும், இந்திய அணி ஒரு வாரம் கழித்தே அந்தத் தொடரில் பங்கேற்கும்'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐபிஎல் ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐக்கு எவ்வளவு கோடி நஷ்டம் தெரியுமா?