அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலாலும், தனிப்பட்ட காரணங்களாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர், ஒருநாள் & டி20 கேப்டன் பொல்லார்ட், டேரன் பிராவோ, ஹெட்மையர், பூரான் உள்ளிட்ட 12 வீரர்கள் விலகியுள்ளனர்.
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா அச்சுறுத்தல், தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக பின்வரும் வீரர்கள் வங்கதேச சுற்றுப்பயணத்தை மறுத்துவிட்டனர்.
ஜேசன் ஹோல்டர், பொல்லார்ட், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் கோட்ரெல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப், சிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன். இதில் ஃபேபியன் ஆலன், ஷேன் டோவ்ரிச் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களினால் தொடரில் பங்கேற்கவில்லை.
மேலும் கரோனா அச்சம் காரணமாக வீரர்கள் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தைத் தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கிறது. இது அவர்களில் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்பதால், அடுத்தடுத்த தொடர்களில் இந்த வீரர்கள் பங்கேற்க எந்தத் தடைகளும் இருக்காது" என்று தெரிவித்துள்ளது.