தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் சூதாட்டம் -11 பேர் கைது! - 11 arrested for placing Rs 2 crore bet

டெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

11-arrested-for-placing-rs-2-crore-bet-on-india-australia-3rd-odi
11-arrested-for-placing-rs-2-crore-bet-on-india-australia-3rd-odi

By

Published : Jan 20, 2020, 5:24 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்தப் போட்டியை மையப்படுத்தி டெல்லியைச் சேர்ந்த இளைஞர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து டெல்லி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் சூதாட்டத்திற்காக பயன்படுத்திய 70 செல்ஃபோன்கள், இரண்டு டிவிகள், ஏழு லேப்டாப்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சூதாட்டத்தில் ரூ. 2 கோடி வரை நடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குதிரை பந்தயத்தைத் தவிர்த்து அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கும் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக சூதாட்டத்தை அங்கீகரிக்கலாம் என்ற பேச்சு தொடங்கியபோது, சட்ட ஆணையம் அந்த யோசனையை முழுவதுமாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆஸியுடனான பழைய கணக்கை தீர்த்துக்கொண்ட கோலி அண்ட் கோ!

ABOUT THE AUTHOR

...view details