ஹைதராபாத்: கிரிக்கெட் என்றால் ஒருவர் பந்தை வீசுவதும் ஒருவர் அதை அடிப்பது மட்டுமல்ல. எல்லா போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மட்டுமே அணியின் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. நாம் அனைவருமே கண்டிப்பாக (catches wins the matches) என்ற வாக்கியத்தைக் கேட்டு இருப்போம். இக்கட்டான சூழ்நிலைகளில் பல அணிக்களுக்கு அவர்கள் எடுக்கும் கேட்சுகள் வெற்றியைத் தேடி தந்துள்ளது. அந்த வகையில், உலக கோப்பை வரலாற்றில் சிறந்த ஐந்து கேட்சுகளை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க உள்ளோம்.
1) ஷெல்டன் காட்ரெல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் ஷெல்டன் காட்ரெலின் 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பிடித்த கேட்ச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அந்த ஆட்டத்தில் காட்ரெல் டீப் ஃபைன் லெக் திசையில் பில்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஓஷேன் தாமஸின் வீசிய பந்தை ஸ்மித் லாங் லெக்கில் சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் டீப் ஃபைன் லெக்கில் இருந்த காட்ரெல் ஒடி வந்து லாபகமாக அந்த கேட்ச்சை எடுத்து அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தினார். இதனால் 73 ரன்களை குவித்து அர்புதமாக விளையாடிய ஸ்மித் ஆட்டமிழந்தார்.
2) ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாம் லாதம் கேச்சை பிடித்து அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் டாம் லாதம் ஃபைன் லெக் திசையில் அடித்ததை அந்த திசையில் பில்டிங் நின்றிருந்த ஸ்மித் வலது பக்கம் குதித்து அற்புதமான கேட்ச்சை பிடித்து அசத்தினார்.
3) ஜெஸ்ஸி ரைடர்
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணியை சேர்ந்த ஜெஸ்ஸி ரைடர். இவர் 2011 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பாயிண்ட் திசையில் பில்டிங் செய்யும் போது, இலங்கை வீரர் உபுல் தரங்கா பாயிண்ட் திசையை தாண்டி பந்தை அடிக்க முயன்றார். ஆனால் ஜெஸ்ஸி ரைடர் இடது பக்கம் குதித்து இடது கையால் அந்த கேட்ச்சை எடுத்து அசத்தினார். இதனால் இலங்கை வீரரான உபுல் தரங்கா 30 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
4) அஜய் ஜடேஜா
முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளார். 1992ம் ஆண்டு உலக கோப்பையில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரின் அற்புதமான கேட்ச்சை எடுத்தார் ஜடேஜா. கபில் தேவ் பந்தில் பார்டர் சிக்ஸ் அடிக்க முயன்றார் ஆனால் பந்து மேல் நேக்கி சென்றது. டீப் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி லையனில் பில்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா முன்னோக்கி நீண்ட தூரம் ஓடி குதித்து அந்த கேட்ச்சை எடுத்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார். இவர் பிடித்த இந்த கேட்ச்சானது ஐசிசி உலக கோப்பை கேட்ச்சுகளில் மிக சிறந்த கேட்ச் ஆகும்.
5) கபில் தேவ்
இந்த வரிசையில் 5வது இடத்தில் இந்தியா முன்னால் கேப்டன் கபில் தேவ் உள்ளார். இவர் 1983 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னால் வீரரான விவ் ரிச்சர்ட்ஸ் கேட்ச்சை எடுத்து அசத்தினார். இவர் இருந்த இடத்தில் இருந்து பின்னோக்கி ஒடி இந்த கேட்ச்சை எடுத்தார். இந்த கேட்ச் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இறுதி போட்டியில் வெற்றி பெற ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதனால் அந்த உலக கோப்பை இறுதி போட்டியில் வென்று இந்திய அணி கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Cricket World Cup 2023: கே.எல்.ராகுலா? இஷான் கிஷனா? மனம் திறந்த இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர்!