தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இளைய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து! - Chief Minister stalin Modi congratulates young cricketers

U-19 இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா 5ஆவது முறையாக சாம்பியன் ஆனது. இதற்கு பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இளைய கிரிக்கெட் வீரர்களுக்கு  முதலமைச்சர்
இளைய கிரிக்கெட் வீரர்களுக்கு முதலமைச்சர்

By

Published : Feb 6, 2022, 7:17 PM IST

Updated : Feb 6, 2022, 8:14 PM IST

2022ஆம் ஆண்டு U-19 இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா 5ஆவது முறையாக சாம்பியன் ஆனது.

இந்த வெற்றிக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத்தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இளம் கிரிக்கெட் வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ICC U19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

போட்டியின் மூலம் அவர்கள் தங்களின் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது என இவர்களின் செயல் சுட்டிக்காட்டுகிறது' என தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், '19 வயதுக்குட்பட்டோருக்கான ICC கிரிக்கெட் உலகக் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள யாஷ்துல் தலைமையிலான இந்திய அணியின் சிறப்பான கூட்டு முயற்சிக்கு வாழ்த்துகள்.

மேலும், முதலாவது அணியாக ஆயிரமாவது, ஒரு நாள் சர்வதேச போட்டியில் விளையாட உள்ள இந்திய சீனியர் ஆண்கள் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்' என வாழ்த்துச்செய்தியினை வெளியிட்டுள்ளார்.

அதேபோல், இதையும் படிங்க:சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் உயிரிழப்பு!

Last Updated : Feb 6, 2022, 8:14 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details