சென்னை:தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி, நுங்கம்பாக்கம் மைதானத்தில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இன்று (பிப்.19) ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்க வீரர் நிக்கோலஸ் மொரேனோ டி ஆல்போரன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்சல் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 5-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில், மேக்ஸ் வெற்றி பெற்றார். இது பர்சலுக்கு மூன்றாவது ஏடிபி சேலஞ்சர் ஒற்றையர் பட்டமாகும்.