கொழும்பு: ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி மிக எளிதாக வென்றது. இதன் மூலம் இந்திய அணி 8வது ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலக கோப்பைக்காக அஸ்வினுடன் தொலைபேசியில் பேசி வருவதாக கூறி இருக்கிறார்.
ஆசிய கோப்பையில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்ற பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூயதாவது. “ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் இறுதி போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய போது அவருக்கு காயம் எற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் போட்டியில் சேர்க்கப்பட்டார்.
இதையும் படிங்க:India Record: ஆஸ்திரேலியாவின் 20 ஆண்டுகால சாதனையை உடைத்த இந்திய அணி!
அக்சருக்கு எற்பட்ட காயத்தில் இருந்து குணம் அடைய ஒரு வாரம் ஆகலாம். அதனால் அவர் வர இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவே. அப்படி அக்சர் படேல் விளையாடா விட்டால் அவருக்கு பதிலாக சேர்க்கப்படும் சூழல் பந்து வீச்சாளர் வரிசையில் அஸ்வினும் இருக்கிறார். நான் அவருடன் தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு பேசி வருகிறேன். நாங்கள் பந்து வீச்சில் மற்றும் பேட்டிங்கில் என இரண்டிலுமே சிறந்து விலங்க கூடியவர்களையே விரும்புகிறோம்” என்றார்.
மேலும், அவர் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயரை பற்றி கூறுகையில்; “ஷ்ரேயாஸ் ஐயரை பெறுத்தவரை அவர் 99 சதவிதம் குணம் அடைந்துவிட்டார். அவர் நன்றாக உள்ளார். இறுதி போட்டியில் தொடங்குவத்ற்கு முன்பு அவர் பயிற்சியில் ஈடுப்பட்டார். அதனால் இந்த நேரத்தி அவர் நலமாக உள்ளார்” என கூறினார்.
இதையும் படிங்க:ICC Ranking: மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி!