டெல்லி:இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு (பிசிசிஐ) தலைவராக சேத்தன் ஷர்மா பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஸ்டிங் ஆப்பரேஷனில் பேசிய சேத்தம் ஷர்மா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக சர்ச்சையாக பேசினார். இதனையடுத்து இந்த ஸ்டிங் ஆப்பரேஷனால் ஊடகங்கள், இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணி தேர்வர்கள் இடையிலான உறவு கடுமையாக பாதித்துள்ளது.
சர்ச்சை மிகுந்த விஷயங்களை ஷர்மா பேசி உள்ளார். ஏற்கனவே பிரபல கிரிக்கெட் வீரர்களான ராகுல் டிராவிட், விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் வெளிப்படையாகவோ அல்லது பயிற்சி நேரங்களிலோ சேத்தன் சர்மா உடன் பேசுவதில்லை. மேலும் டி20 ஆஸ்திரேலிய உலக கோப்பை போட்டியிலும் எந்த ஒரு வீரர்களும் சேத்தன் ஷர்மா உடன் பேசவில்லை.