டெல்லி: நியூசிலாந்து ஏ அணி வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 நான்கு நாள் ஆட்டங்களிலும், 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாட உள்ளது. இந்த அணிக்கு எதிரான இந்திய ஏ அணியை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அந்த வீரர்கள் விவரம் பின்வருமாறு.
இந்திய ஏ அணி: பிரியங்க் பஞ்சால் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, கே.எஸ்.பாரத் (வி.கீ), உபேந்திர யாதவ் (வி.கீ), குல்தீப் யாதவ், சவுரப் குமார், ராகுல் சாஹர், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், முகேஷ் குமார், யாஷ் தயாள், அர்சான் நாக்வாஸ்வல்லா.