தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒருநாள் போட்டிக்கும் இனி ரோஹித்தான் கேப்டன் - இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Rohit Sharma
Rohit Sharma

By

Published : Dec 8, 2021, 8:47 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக இனி ரோஹித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுவரை கேப்டனாக இருந்த விராத் கோலி இனி டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக இருப்பார்.

அண்மையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியுடன் டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராத் கோலி அறிவித்தார். இதையடுத்து டி20 அணியின் கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். 2023ஆம் ஒருநாள் உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார் எனக் கூறப்படுகிறது.

இம்மாதம் தென்னாப்ரிக்கா பயணம் செய்யும் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது.

இதற்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டெஸ்ட் அணியின் கேப்டனாக விராத் கோலி உள்ளார். ராஹானேவிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு, அது ரோஹித் சர்மாவுக்கு தரப்பட்டுள்ளது.

காயம் காரணமாக ஜடேஜா, சுப்மன் கில், அக்ஷர் படேல், ராகுல் சஹார் ஆகியோர் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தொடங்கியது ஆஷஸ் போர்: ஆஸ்திரேலியா ஆதிக்கத்தில் அலறிய இங்கிலாந்து

ABOUT THE AUTHOR

...view details