டெல்லி: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.
ஏற்கனவே பாகிஸ்தான், இலங்கை , வங்கதேசம் அணிகள் தனது வீரர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது. இந்நிலையில் ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான 17 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இன்று (ஆகஸ்ட் 21) அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சூடு... பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீரர்கள்!
டெல்லியில் இன்று (ஆக்ஸ்ட் 21) நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்தில் ரோஹித் சர்மா மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.