மிர்பூர்:இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் இன்று (டிசம்பர் 4) தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய வீரர்கள் 41.2 ஓவர்களில் 186 ரன்களை மட்டுமே எடுத்தனர். வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
IND vs BAN: இந்திய அணியை 186 ரன்களில் சுருட்டிய வங்கதேசம்
இந்திய, வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்களை எடுத்துள்ளது.
அதிகபட்சமாக, கே.எல். ராகுல் 70 பந்துகளுக்கு 73 ரன்களை எடுத்தார். அதேபோல கேப்டன் ரோஹித் சர்மா 31 பந்துகளுக்கு 27 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 39 பந்துகளுக்கு 24 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல எபாடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹசன் மிராஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். வங்கதேச அணிக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக உள்ளது.
இதையும் படிங்க:இந்தியா-வங்கதேசம் கிரிக்கெட் தொடர்: முகமது ஷமிக்கு மாற்றாக உம்ரான் மாலிக்