மிர்பூர்:இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதலாவது ஒருநாள் போட்டி டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடந்தது. இந்த போட்டியில் வங்தேச கிரிக்கெட் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து இன்று (டிசம்பர் 7) 2ஆவது ஒருநாள் போட்டி ஷேர்-இ-பங்களா மைதானத்திலேயே நடந்தது. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணியில் கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய வங்கதேச வீரர்கள் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 83 பந்துகளுக்கு 100 ரன்களையும், மஹ்முதுல்லா 96 பந்துகளுக்கு 77 ரன்களையும் எடுத்தனர். மறுபுறம் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.