சிட்னி:டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 12 சுற்று இன்று (அக். 22) சிட்னியில் தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த சுற்றில் ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித், ஆஷ்டன் அகர், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மறுப்புறம் நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில், ஆடம் மில்னே, டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் நீக்கப்பட்டுள்ளனர்.