புளோம்பாண்டீன்: சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் நடசத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் அவரது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 100 சதங்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தி காட்டியவர். அவரது சாதனையை இன்று வரை யாராலும் எட்டமுடியாத இலக்காக தான் இருந்து வருகிறது.
சச்சின் விளாசிய அந்த 100 சதங்களில் தொடக்க வீரராக மட்டும் 45 சதங்களை அடித்துள்ளார். இந்நிலையில் தொடக்க வீரராக 45 சதங்கள் என்ற சாதனையை தற்போது ஆஸ்திரேலியா தொடக்க வீரர் டேவிட் வார்னர் முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:Asia cup 2023: வங்கதேசத்தை பந்தாடிய இலங்கை! அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறிதான்?
இதில் டி20 தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. அதில் 2வது ஒருநாள் போட்டி நேற்று (செப்டம்பர் 09) தென் ஆப்பிரிக்காவில் உள்ள மங்காங் ஓவல் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி. டேவிட் வார்னர் மற்றும் லபுசனின் சதங்களால் 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 392 ரன்களை குவித்தது.
அதன் பின் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 41.5 ஒவர்கள் முடிவில் 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது ஆஸ்திரேலியா அணி. இதில் நேற்றைய சதத்தின் மூலம் வார்னர் தனது ஒருநாள் கிரிக்கெட்டில் 20வது சதத்தை எட்டினார். தொடக்க வீரராக ஒருநாள் போட்டிகளில் 20, டெஸ்ட் கிரிக்கெட்டில் 25, டி20 கிரிக்கெட்டில் 1 சதம் என மொத்தம் 46 சதங்களை அவர் அடித்து உள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கர் 45 சதங்கள் அடித்திருந்த சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார்.
இதையும் படிங்க:US Open Final: ஜோகோவிச், மெட்வெடேவ் இறுதி போட்டியில் சந்திப்பு!