தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜடேஜா சுழலில் ஆட்டம் கண்ட ஆஸி., அணி.. இந்தியா அபார தொடக்கம்! - india australia test match score

இந்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது

ஜடேஜா சுழலில் ஆட்டம் கண்ட ஆஸ்திரேலியா… இந்தியா அபார தொடக்கம்!!
ஜடேஜா சுழலில் ஆட்டம் கண்ட ஆஸ்திரேலியா… இந்தியா அபார தொடக்கம்!!

By

Published : Feb 9, 2023, 1:58 PM IST

நாக்பூர்: இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கேட் அணி 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி இன்று நாக்பூர் விதர்பா மைதானத்தில் தொடங்கியது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் வென்று தொடர் வெற்றியை பெற்று வரும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்த தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே சமயம் கடந்த இரண்டு முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையில் சொந்த மண்ணில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி கோப்பையை இழந்ததால் வெற்றி முனைப்புடன் களமிறங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சில் அனல் பறந்தது. முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 1 ரன்னில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார். பின்னர் இரண்டாவது ஓவரை வீசிய ஷமி வார்னருக்கு அதிர்ச்சி கொடுத்தார். ரவுண்டு தி விக்கெட் முறையில் ஷமி பந்துவீச வார்னர் பேட்டில் பட்டு ஆஃப் ஸ்டம்ப் பறந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டிவ் ஸ்மித், லம்புஷேன் நிதானமாக ஆடினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது. பின்னர் பந்து வீச வந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சினை ஸ்மித், லம்புஷேன் ஆகிய இரு பேட்ஸ்மனும் பவுண்டரிகளாக அடித்து பதம் பார்த்தனர். 35வது ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜா இரட்டை பதிலடி கொடுத்தார்.

பிட்ச்சில் இறங்கி வந்து ஆட முயன்ற லம்புஷேன் பரத்தின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் 49 ரன்னில் அவுட்டானார். அடுத்த பந்தில் புதிய பேட்ஸ்மனான ரென்ஷா எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டாக ஆஸ்திரேலியா மிடில் ஆர்டர் ஆட்டம் கண்டது. பின்னர் ஹேன்ஸ்காம்ப், ஸ்டிவ் ஸ்மித் ஜோடி அணியை சரிவிலிருந்து மிட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது.

அக்சர் பட்டேல் ஒரே ஓவரில் 3 பவுண்டரி அடித்த ஸ்டிவ் ஸ்மித் அதிரடி காட்டினார். மீண்டும் பந்து வீச வந்த ஜடேஜா பந்தில் 37 ரன்னில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார். தற்போது 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஹேன்ஸ்காம்ப் 23 ரன்களுடனும், கேரி 35 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: "இதுவே சரியான தருணம்": ஆஸி. வீரர் ஆரோன் பின்ச் ஓய்வு!

ABOUT THE AUTHOR

...view details