தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அரைசதம் விளாசிய ஆஸி. தொடக்க வீரர்கள். திணறும் இந்திய பந்துவீச்சாளர்கள். - வார்னர்

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸி. அணி 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்களை சேர்த்துள்ளது.

australia-scored-134-runs-in-25-overs
australia-scored-134-runs-in-25-overs

By

Published : Nov 27, 2020, 12:11 PM IST

Updated : Oct 18, 2022, 11:50 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இன்று நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து வார்னர் - ஃபின்ச் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த இணை தொடக்கம் முதலே விக்கெட் கொடுக்க கூடாது என்று கவனமாக ஆட, இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர்.

நடுவே கிடைத்த சில ரன் அவுட் வாய்ப்புகளையும் இந்திய அணியினர் தவறவிட, ஆஸி. வீரர்கள் 6 ரன் ரேட்டில் வேகமாக ரன்கள் சேர்க்கத் தொடங்கினர். கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஒருமுனையில் செட்டாகி, வார்னரின் ப்ரஷரை குறைத்தார்.

இதனால் 10 ஓவர்கள் முடிவில் ஆஸி. அணி 51 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த இணை, சிங்கிள்களாக ரன்கள் குவித்ததோடு, இடையே பவுண்டரிகளும் பறக்கவிட்டனர். 18ஆவது ஓவரின்போது கேப்டன் ஆரோன் ஃபின்ச் 28ஆவது ஒருநாள் அரைசதத்தைப் பதிவு செய்தார். இதையடுத்து 19ஆவது ஓவரில் ஆஸி.100 ரன்களை கடந்தது.

இதனைத்தொடர்ந்து வார்னரும் ஒருநாள் போட்டிகளில் தனது 22ஆவது அரைசதத்தைப் பதிவு செய்ய, ஆஸி. அணி 25 ஓவர்களில் 134 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது.

இதையும் படிங்க:ரசிகர்களின் உருக்கமான அஞ்சலியுடன் மரடோனாவின் உடல் நல்லடக்கம்!

Last Updated : Oct 18, 2022, 11:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details