தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Pat Cummins : இனி வரும் அனைத்து ஆட்டங்களும் இறுதி போட்டி போன்றது - பேட் கம்மின்ஸ்! - World cup Cricket Aus Vs SL

World Cup Cricket 2023: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. இனி வரும் ஆட்டங்கள் இறுதிப் போட்டி போன்றது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்து உள்ளார்.

Pat Cummins
Pat Cummins

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 7:36 PM IST

லக்னோ : இனி வரும் அனைத்து ஆட்டங்களும் இறுதிப் போட்டி போன்றது என்றும் அனைத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்து உள்ளார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றி விளையாடி வருகின்றன.

ஏறத்தாழ 12 போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், எதிர்கொண்ட மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு தொடர் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு திருப்புமுனைகளை எதிர்கொண்டு வருகிறது. நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

அதேநேரம் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, நடப்பு இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளின் போட்டிகள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்று கூறினாலும் அது மிகையாகாது. அந்த அளவுக்கு அந்த அணியின் செயல்பாடுகள் மோசமாக காணப்படுகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலிய அணி, தான் சந்தித்த இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

கடந்த 8ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி சென்னை மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த ஆட்டத்திலும் 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தனர்.

இந்நிலையில் அக்டோபர் 16ஆம் தேதி ஆஸ்திரேலிய அணி தனது மூன்றாவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை லக்னோ மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இனி வரும் அனைத்து ஆட்டங்களும் இறுதிப் போட்டிக்கு சமமானது என்றும் அனைத்திலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

கடந்த 2019 ஆம் அண்டு உலக கோப்பை போட்டியின் போதும், இதேபோல் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்ததாகவும், பின்னர் அரைஇறுதிப் போட்டி வரை ஆஸ்திரேலிய முன்னேறிச் சென்றதாக பேட் கம்மின்ஸ் தெரிவித்தார். இனி வரும் ஆட்டங்களில் வெற்றிக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதில் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றி பெறும் என கம்மின்ஸ் கூறினார்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பேட்டிங் வரிசையில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாகவும் அதன் காரணமாகவே இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான ஆடத்தில் 200 ரன்களுக்கும் முன்னதாக அட்டமிழக்க வேண்டியதானதாக கூறினார். மிடில் ஓவர்களில் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் வீரர்களிடையே பிரச்சினை இருப்பதாக பேட் கம்மின்ஸ் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி வரும் ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் உள்ளது.

இதையும் படிங்க :ஆப்கான் கேப்டன் அவுட்டுக்கு இமிடேட் செய்தது ஏன்? - பும்ரா விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details