மொஹாலி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய வீரர்கள் களம் இறங்கினர். இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஹார்திக் பாண்டியா 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ராகுல் 55 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மீதமுள்ளவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.