மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, இவ்விரு அணிக்களுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், இன்று (டிச.30) 2வது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸ்ஸில் ஆஸ்திரேலிய அணி விளையாடி இந்திய அணிக்கு 258 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யாஸ்திகா பாட்டியா - ஸ்மிருதி மந்தனா ஜோடி களமிறங்கியது. இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில், 2 பவுண்டரிகளை விளாசி 37 ரன்களில் 6.6வது ஓவரில், யாஸ்திகா பாட்டியா எல்பிடபிள்யூவால் ஆட்டமிழந்தார்.
பின்னர், இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ் களமிறங்கி, தனது திறமையை வெளிப்படுத்தினார். ஸ்மிருதி மந்தனா - ரிச்சா கோஷ் ஜோடி சிறப்பாக விளையாடி, அணிக்கு ரன்களைச் சேர்த்தனர். 15 ஓவர் முடிவில் இந்திய அணி 70 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
அதன்பின், ஸ்மிருதி மந்தனா 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் வீதம் 38 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களத்தில் ரிச்சா கோஷ் இருந்தார். பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், 55 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து, 33.1வது ஓவரில் தனது ஆட்டத்தை இழந்தார்.