தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு - Legend Andrew Aymonds

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மற்றும் ராட் மார்ஷ் ஆகியோரின் துயர மரணத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46) கார் விபத்தில் உயிரிழந்தார்.

ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு!
ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு!

By

Published : May 15, 2022, 7:32 AM IST

குயின்ஸ்லாந்து: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46) நேற்றிரவு (மே 14) 10.30 மணியளவில் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து குயின்ஸ்லாந்தில் உள்ள ஹெர்வி ரேஞ்ச் சாலையில் நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஷேன் வார்ன் உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்கட்ட தகவலில், அவர் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

1999 - 2007ஆம் ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. அப்போது, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தவர். இதையடுத்து ஓய்வுபெற்று, ஃபாக்ஸ் கிரிக்கெட்டின் வர்ணனைக் குழுவில் பணியாற்றி வந்தார்.

இதையும் படிங்க: 'ஐபிஎல் 2022: கொல்கத்தா அணி அபார வெற்றி... ஆண்ட்ரே ரசல் அசத்தல்...'

ABOUT THE AUTHOR

...view details