கொழும்பு (இலங்கை): 16வது ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் தொடங்கி அதன் சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி சுற்றுக்கு இந்தியா மற்றும் இலங்கை அணி முன்னேறிய நிலையில், சுப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியாக இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி இலங்கை ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே இந்திய அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியதால் இந்த போட்டி அதன் முன்னோட்டாமவே பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சிராஜ், மற்றும் பும்ராவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டு. திலக் வர்மா, முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே போல் வங்கதேச அணியில் முகமது நயிம், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் நீக்கப்பட்டு. தன்சித் ஹசன், அனாமுல் ஹக், மகேதி ஹசன், தன்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், வங்கதேசம் அணி திணறியது. அந்த அணியின் வீரர் லிட்டன் தாஸ் டக் அவுட் ஆனார். அதன் பின் தன்சித் ஹசன் 13 ரன்களிலும், ஆனமுல் 4 ரன்களிலும், மெஹிதி ஹசன் 13 ரன்களிலும் வெளியேறினர்.
பின்னர் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் டவ்ஹித் ஹ்ரிடோய் பொறுப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். 33.1 ஒவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷாகிப் அல் ஹசன் 80 ரன்களிலும், டவ்ஹித் ஹ்ரிடோய் 54 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்கதேசம் அணி 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணி சார்பில் தாக்கூர் 3 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மேலும், பிரசித், அக்சர் மற்றும் ஜடேஜா ஆகியோர் அவர்களது பங்கிற்கு தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:MS Dhoni: தோனி என்னும் சகாப்தம் கேப்டனாக பயணத்தை தொடங்கிய நாள் இன்று!