கொழும்பு:ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்த சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை போட்டியிட வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேறும் அணிகள் இறுதி போட்டியில் மோத உள்ளன.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியாக இன்று (செப்.10) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இலங்கை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கே.எல்.ராகுலும், முகமது ஷமிக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ராவும் விளையாடுகின்றனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது. அதன்படி பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் அணியின் பந்து விச்சை நாளா புறமும் சிதரடித்த இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டியது.