தமிழ்நாடு

tamil nadu

IND VS PAK: இந்திய - பாகிஸ்தான் ஆட்டம்... மழைக்கு 90 சதவிதம் வாய்ப்பு! என்ன நடக்க போகுது?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 8:02 PM IST

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மழை பெய்ய 90 சதவிதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

india vs pakistan
india vs pakistan

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேறும் அணிகள் இறுதி போட்டியில் மோதும். சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் தொடங்கியது. இதனை அடுத்து நாளை (செப். 10) பாகிஸ்தான் அணி - இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், ஆசிய கோப்பை தொடக்கம் முதலே மழை குறிக்கிடுவதால் போட்டிகள் பாதிப்படைந்து வருகின்றன. கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் மோதிய லீக் போட்டி மழையால் எவ்வித முடிவும் இன்றி நிறுத்தப்பட்டது. மேலும், இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:Neymar: பீலேவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த நெய்மர்! எதுல தெரியுமா?

தொடர்ந்து மழை குறிக்கிட்டு ஆட்டங்கள் தடைபடுவதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். இதனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வர இருக்கும் பாகிஸ்தான் - இந்தியா மோதும் சூப்பர் 4 சூற்றுக்கும், ஆசிய கோப்பையின் இறுதி போட்டிக்கும் ரிசர்வ் டேவை அறிவித்தது.

இந்த நிலையில் நாளை (செப். 10) 90 சதவிதம் மழை பெய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. அப்படி மழை பெய்யும் பட்சத்தில் போட்டியானது திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை டிக்கெட்களை திங்கட்கிழமை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் - இந்தியா கணிக்கப்பட்ட அணி விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்தர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷதாப் கான், முகமது வாசிம், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப், நசீம் ஷா.

இதையும் படிங்க:US Open Final: ஜோகோவிச், மெட்வெடேவ் இறுதி போட்டியில் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details