டெல்லி: 16வது ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி கடந்த மாதம் இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் முன்னேறின. இதனைத்தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேச அணியை பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆசிய கோப்பை போட்டித் தொடரில் தொடக்கத்தில் இருந்தே மழை குறிக்கிடுவதால் போட்டிகள் பாதிப்பு அடைந்து வருகிறது. இதனால் செப்டம்பர் 2ஆம் தேதி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் - இந்தியா அணிகள் மோதி கொண்ட ஆட்டம் எவ்வித முடிவும் இன்றி நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் எமாற்றமடைந்தனர். இதன் காரணமாக நேற்று (செப். 8) ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சூப்பர் 4ல் இந்தியா - பாகிஸ்தான் மோதும் அட்டத்திற்கும், ஆசிய கோப்பையின் இறுதி போட்டிக்கும் ரிசர்வ் டே அறிவித்தது.
இதையும் படிங்க:8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் ஆஸ்திரேலிய வீரர்!
அதாவது போட்டி நடைபெறும் அன்று மழை குறுக்கிட்டால், அந்த போட்டி கைவிடப்பட்டு மறுநாள் மீண்டும் அதே போட்டி நடத்தப்படும். அதுவே ரிசர்வ் டே என அழைக்கப்படுகிறது. ஆனால் இலங்கை - வங்தேசம் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்படவில்லை. இந்த அணிகள் மோதும் போட்டியின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அப்படி போட்டி பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியே கிடைக்கும். மாறாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மழை குறிக்கிட்டு பாதிக்கப்பட்டால் ஆட்டம் கைவிட்ட இடத்தில் இருந்து மாற்று நாளில் போட்டி நடைபெறும். அசிய கிரிக்கெட் கவுன்சிலின் முடிவு பாரபட்சம் என இலங்கை மற்றும் வங்கதேச அணிகளின் ரசிகர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டன.
இந்த பாரபட்சமான விதி, இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு அநீதி இழைக்கப்படுவது போல் இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து இலங்கை மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் அமைப்புகள் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளன. அதில் "இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு ரிசர்வ் டே என்ற முடிவு நான்கு அணிகளையும் அலோசித்து எடுக்கப்பட்ட முடிவு" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:Asia Cup 2023: இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு... ரிசர்வ் டே இருக்கா?