லாகூர்:ஆசிய கோப்பை 2023 தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. லாகூரில் உள்ள கடாஃபி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்று வரும் ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் பதும் நிஷாங்கா மற்றும் திமுத் கருணாரத்னே ஆகிய வீரர்கள் தலா 6 பவுண்டரிகள் உடன் முறையே 41, 32 ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதேநேர், சதீரா சமர் விக்ரமா 3 ரன்களிலே ஆட்டம் இழந்தனர். இதனையடுத்து, சிறப்பாக விளையாடிய குஷல் மெண்டிஸ் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இதனால், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து உள்ளது. பந்து வீச்சைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தானின் குல்பாதின் நயிப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். அதேநேரம், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 292 ரன்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் முகம்மது நபி மற்றும் ஹஸ்மதுல்லா சஹீதி ஆகியோர் அரைசதம் கடந்து முறையே 65, 56 என்ற ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதேநேரம், ரஹ்மத் ஷா 45 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதனையடுத்து அதிக பந்துகள் இருந்த நிலையிலும் ஆப்கானிஸ்தான் ஆல் அவுட் ஆனது. முக்கியமாக, 8 விக்கெட்டுகள் இழந்த நிலையில், 37வது ஓவரின் முதல் பந்தில் முஜீப் உர் ரஹ்மான் ரன் ஏதும் எடுக்காமலே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, அதே ஓவரில் 4வது பந்தில் ஃபசால் ஃபரூஹியும் ரன் ஏதும் எடுக்காத நிலையில் எல்பிடபிள்யூ செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனால், 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை வென்றது. மேலும், பந்து வீச்சைப் பொறுத்தவரை இலங்கை அணியின் கசுன் ரஜிதா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வலு சேர்த்தார். அதேபோல், துனித் வெல்லாலகி மற்றும் தனஞ்செய தி சில்வா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா மற்றும் மதீஷா பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இலங்கை பிளேயிங் 11:தசுன் ஷங்கர் (கேப்டன்), குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), பதும் நிஷாங்கா, திமுத் கருணாரத்னே, சதீரா சமர்விக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்செய தி சில்வா, துனித் வெல்லாலகி, மகேஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா மற்றும் மதீஷா பதிரானா.
ஆப்கானிஸ்தான் பிளேயிங் 11: ஹஸ்மதுல்லா சஹிதி (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பஜ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரான், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகம்மது நபி, குலாபதின் நயிப், கரீம் ஜனத், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ஃபசல்ஹா ஃபரூஹி.
இதையும் படிங்க:World Cup India Squad : உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு!