தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Asia Cup 2023: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதல்! - ஐசிசி

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் அட்டத்தில் நேபாளம் அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் vs நேபால் 2023
Pak vs Nep 2023

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 9:07 AM IST

கராச்சி: 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஆகஸ்ட். 30) பாகிஸ்தானின் முல்தான் நகரில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான உள்பட 6 அணிகள் கலந்து கொள்கிறது. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலக கோப்பை நடைபெற இருப்பதால் அதன் முன்னோட்டமாக இந்த தொடர் பார்க்கபடுகிறது.

நேபாளம் அணியை தவிர்த்து மீதம் உள்ள 5 அணிகளும் தங்களை உலக கோப்பைக்கு தயார்படுத்தி கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் காணப்படுகிறது. இதில் இந்திய, பாகிஸ்தான், நேபாளம் ஒரு குருப்பிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஒரு குருப்பிலும் உள்ளன.

ஒவ்வொறு குருப்பிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை போட்டியிட்ட வேண்டும். லீக் ஆட்டத்தின் முடிவில் ஒவ்வொறு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதன் இறுதி ஆட்டம் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய அணியில் முதல் இரண்டு போட்டிகளில் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான கே.எல் ராகும் இடம் பெற மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். முதல் ஆட்டமாக இன்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணி அளவில் தொடங்குகிறது. நேபாளம் அணி முதல் முறையாக ஆசிய கோப்பையில் விளையாடுகிறது. தனது முதல் போட்டியிலேயே ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்து முடிந்த ACC ஆடவர் பிரிமியர் லீக் ஆட்டங்களின் இறுதி போட்டியில் ஐக்கிய அரபு அணியை வீழ்த்தி நோபாளம் அணி கோப்பை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி, சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது. அதே வேகத்துடன் இந்த ஆசிய தொடரில் களம் இறங்குகிறது. இதில் தனது 3வது கோப்பையை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் விளையாட உள்ளது.

இந்த முல்தான் மைதானத்தில் டாப் ஆடர் பேட்ஸ்மனான பாபர் அசம் மற்றும் இமாம்-உல்-ஹக் தலா 60.33 சராசரியை கொண்டு உள்ளனர். மிடில் ஆடரில் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான், ஆகா சல்மான் ஆகியோரும் பந்து வீச்சில் ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

இதுவரை நடந்து முடிந்த 15 எடிஷனில் 13 எடிஷன்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக நடைபெற்ற இருந்த நிலையில் மீதமுள்ள இரண்டு எடிஷன்கள் டி20 போட்டியாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 6 முறை இந்திய அணியும், 5 முறை இலங்கை அணியும், 2 முறை பாகிஸ்தான் அணியும் கோப்பை கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்திற்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான்: ஃபகார் சமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.

நேபால் (கணிக்கப்பட்ட அணி): குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), பீம் ஷர்கி, ரோஹித் பௌடெல் (கேப்டன்), குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி, சந்தீப் லமிச்சனே, லலித் ராஜ்பன்ஷி.

இதையும் படிங்க:KL Rahul : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கே.எல்.ராகுல் விலகலா? - ராகுல் டிராவிட் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details