பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் இந்திய அணி 267 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில், அட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இரு அணிக்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.
Ind vs Pak Asia Cup 2023: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ரத்து...சூப்பர் 4க்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி - ரோஹித் சர்மா
Published : Sep 2, 2023, 3:58 PM IST
|Updated : Sep 2, 2023, 10:29 PM IST
22:08 September 02
India vs Pakistan Live Score: மழையால் ஆட்டம் ரத்து!
21:20 September 02
India vs Pakistan Live Score: மழையால் தாமதம்...ஒவர்கள் குறைக்கப்படுமா?
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஒவர்கள் குறைக்கப்பட்டால் இலக்கு என்னவாக இருக்கும்? ஒருவேளை 40 ஒவர்களாக குறைக்கப்பட்டால் 239 ரன்களும், 30 ஒவர்கள் குறைக்கப்பட்டால் 203 ரன்களும், 20 ஒவர்களாக குறைக்கப்பட்டால் 155 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
20:57 September 02
India vs Pakistan Live Score: ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற்று வரும் இலங்கை பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
19:45 September 02
India vs Pakistan Live Score: இந்தியா ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 82 ரன்களும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களும் விளாசினர். பந்து வீச்சு தரப்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்களும், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரஃப் தலா 3 விக்கெட்களும் எடுத்து அசத்தினர்.
19:41 September 02
India vs Pakistan Live Score: இந்தியா 261/9
இந்தியா அணி 261 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நசீம் ஷா பந்து வீச்சில் குல்தீப் யாதவ் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
19:32 September 02
India vs Pakistan Live Score: இந்தியா 250!
இந்தியா அணி 46 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது.
19:20 September 02
India vs Pakistan Live Score: அடுத்தடுத்து விக்கெட்கள்!
ஷஹீன் அப்ரிடி பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்ததை அடுத்து ஜடேஜா அவுட் ஆன நிலையில், அடுத்த ஒவரில் ஷர்துல் தாக்கூர் நசீம் ஷா பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
19:14 September 02
India vs Pakistan Live Score: ஹர்திக் பாண்டியா அவுட்!
சிறப்பாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷஹீன் அப்ரிடி பந்து வீச்சில் ஆகா சல்மானிடம் கேச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
19:09 September 02
India vs Pakistan Live Score: 42 ஒவர்கள் முடிவில்!
இந்திய அணி 42 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
18:52 September 02
India vs Pakistan Live Score: ஹர்திக் பாண்டியா சதம் அடிப்பாரா?
இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா 83 பந்துகளில் 80 ரன்களை கடந்துள்ளார். இஷான் கிஷன் சதம் அடிக்க தவறி ஏமாற்றம் அளித்த நிலையில், ஹர்திக் பாண்டியா சதம் அடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
18:47 September 02
India vs Pakistan Live Score: இஷான் கிஷன் ஆட்டமிழப்பு
தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இக்கட்டான சூழ்நிலையில் இருந்த இந்திய அணியை மிட்ட இஷான் கிஷன் 38வது ஒவர் 3 பந்தில் ஹாரிஸ் ரஃப் பந்து விச்சில் பாபர் அசாமிடம் கேச் கொடுத்து 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
18:43 September 02
India vs Pakistan Live Score: அதிரடி ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி!
இதுவரை நிதானமாக விளையாடி வந்த இந்திய அணி கடந்த 37வது ஒவரில் மட்டும் 16 ரன்களை விளாசியுள்ளனர். 37 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிறகு 203 ரன்களை அடித்துள்ளது.
18:37 September 02
India vs Pakistan Live Score: 5வது விக்கெட் பார்ட்னர்ஷிப்
இந்திய அணியை அரண் போல காத்த ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்திய அணி 36 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்துள்ளது.
18:30 September 02
India vs Pakistan Live Score: ஹர்திக் பாண்டியா அரைசதம்!
இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்புடன் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா 62 பந்துகளில் அரைசதம் கடந்துள்ளார்.
18:07 September 02
India vs Pakistan Live Score: வலுவான நிலைக்கு முன்னேறும் இந்திய அணி!
32 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்ந்துள்ளது. இஷான் கிஷன் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்கள் உள்பட 59 ரன்களும், ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களுடன் களத்தில் நிலைத்து நின்று விளையாடி வருகின்றனர்.
17:58 September 02
India vs Pakistan Live Score: அரைசதம் கடந்த இஷான் கிஷன்
இந்தியா அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷன் ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. இந்திய அணி 28.2 ஒவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
17:36 September 02
இஷான் கிஷன் - ஹர்திக் பாண்டியா நிதானம்
இந்திய அணியின் இஷான் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் பார்ட்னர்ஷிப் 52 பந்துகளில் 50 ரன்கள் கடந்துள்ளனர். இந்திய அணி 24 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 121 ரன்கள் சேர்ந்துள்ளது.
17:32 September 02
100 ரன்களை கடந்த இந்திய அணி!
இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடி வரும் இஷான் கிஷன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர்கள் உள்பட 35 ரன்கள் சேர்த்துள்ளார். மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 17 ரன்கள் எடுத்துள்ளார்.
17:27 September 02
18வது ஒவரில் இந்தியா
நிதானமாக ஆடி வரும் இந்திய அணி 18 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 94 ரன்கள் சேர்ந்துள்ளது.
15:39 September 02
IND VS PAK
பல்லேகலே: 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியாக பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதின. அதில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 2வது லீக் போட்டியாக இலங்கை அணி வங்கதேசத்தை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில் தொடரின் 3வது லீக் போட்டியாக இன்று (செப்டம்பர் 2) இந்தியா - பாகிஸ்தான் அணிக்களுக்கு இடையே இலங்கை பல்லேகலே சர்வதேச மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி களம் இறங்கினர்.
தொடர்ந்து விளையாடி வந்த இந்திய அணி 4.2 ஓவர்கள் முடிவில் 15 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 8 பந்துகளில் ரன்கள் எடுக்கவில்லை. ரோஹித் சர்மா 2 பவுண்டரிகள் உள்பட 18 பந்துகளில் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தொடர்ந்து மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நின்றுள்ளது.
மழையினால் தடைபட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், ரோஹித் சர்மா 12 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 4 ரன்களிலும் ஷஹீன் அப்ரிடி பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கி உள்ளார். 7.4 ஒவர்கள் முடிவில் 38 ரன்கள் இந்திய அணி எடுத்துள்ளது.
சிறப்பாக இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்திய அணி 11.2 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 2 ரன்களுடனும், சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மீண்டும் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக குறிக்கிட்ட மழை நின்று மீண்டும் ஆட்டம் தொடங்கபட்டுள்ளது. இஷான் கிஷன் சிக்ஸரை விளாசியுள்ளார். இதுவே இந்த போட்டியின் முதல் சிக்ஸர் ஆகும். 12 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 58 ரன்கள் சேர்த்துள்ளது.
இதனை தொடர்ந்து 13வது ஒவரின் 5 பந்தில் இஷான் அடித்த பந்து ஃபிர்ஸ்ட் ஸ்ப்பில் நின்று கொண்டிருந்த பீல்டரின் கைக்கு எட்டாத நிலையில், பந்து பவுண்டரியை நோக்கி சென்றது. நிதானமாக விளையாடி வந்த இந்திய அணி 14 ஒவர்கள் முடிவில் 66 ரன்கள் சேர்த்தது.
சுப்மன் கில் அவுட்: ஹாரிஸ் ரஃப் பந்து வீச்சில் சும்பன் கில் போல்ட் ஆகிவுள்ளார். தொடக்கம் முதலே கில் திணறி வந்த நிலையில் 32 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். 16 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 83 ரன்கள் சேர்ந்துள்ளது. இஷான் கிஷன் 23 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.