துபாய்:ஆசிய கோப்பை 2022 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆக. 27ஆம் தேதி தொடங்கியது. இதன் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளும் இடம்பெற்றிருந்தன. குரூப் சுற்றுகள் முடிவில் 'ஏ' பிரிவில் ஹாங்காங் அணியும், 'பி' பிரிவில் வங்கதேச அணியும் தொடரில் இருந்து வெளியேறின.
இதனைதொடர்ந்து, நடைபெறும் 'சூப்பர் -4' சுற்றில், மீதம் இருக்கும் நான்கு அணிகளும், மற்ற மூன்று அணிகளுடன் தலா 1 முறை மோதுகிறது. இதில், 'சூப்பர் - 4' சுற்றில், நேற்று (செப்.3) நடைபெற்ற முதல் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தினர்.
இந்நிலையில், 'சூப்பர்-4' சுற்றின் 2ஆவது போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று (செப். 4) மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்பேட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.