தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

WTC FINAL: அஸ்வினின் மனைவி வெளியிட்ட மேட்ச் அப்டேட் - ashwin wife tweet about rain update

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டனில் மழை நின்றுவிட்டதாக இந்திய வீரர் அஸ்வினின் மனைவி தகவல் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் மனைவி ப்ரீத்தி நாராயணன்
அஸ்வினின் மனைவி

By

Published : Jun 18, 2021, 7:39 PM IST

சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து):உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் ரோஸ் பவுல் மைதானம், ரசிகர்கள் தங்கும்வசதியுடன் கூடிய விடுதியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பால்கனி வியூ

இந்த விடுதியில் வெளிப்புறமாக இருக்கும் பால்கனியில் இருந்தே ரசிகர்கள் போட்டியைக் கண்டுகளிக்கலாம். கரோனா பரவல் காரணமாக பெரும் அளவில் ரசிகர்கள் அனுமதிக்கபடாத நிலையில், தற்போது அந்த விடுதியில் வீரர்களும், வீரர்களின் குடும்பத்தினரும் தங்கியுள்ளனர்.

இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது மனைவி ப்ரீத்தி நாராயணன், இரண்டு மகள்கள் ஆகியோருடன் மைதானத்தின் விடுதியில் தங்கியிருக்கிறார்.

நின்றது மழை

இன்று (ஜூன் 18) தொடங்கவேண்டிய போட்டி, டாஸ் கூட போடப்படாமல், மழையால் தடைப்பட்டுள்ளது. முதல் நாளின், முதல் செசன் மழையால் முழுமையாக முழ்கிவிட்ட நிலையில், போட்டி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் பேரார்வத்தில் உள்ளனர்.

ரவிச்சந்திரன் அஸ்வினின் மனைவி ப்ரீத்தி நாராயணன் ட்விட்டுகள்

இந்நிலையில், அஸ்வின் மனைவி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விடுதியின் பால்கனியில் இருந்து மைதானத்தை வீடியோ எடுத்து,"மழை நின்றுவிட்டது. மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

போட்டி எப்போது தொடங்கும் என ஐசிசி, ரசிகர்களை காக்கவைத்துக் கொண்டிருக்க, அஸ்வினின் மனைவி கொடுத்த இந்த மேட்ச் அப்டேட் ரசிகர்களின் மனதில் பாலை வார்த்துள்ளது.

மேட்ச் அப்டேட்?

இருப்பினும், ஆடுகளத்தின் ஈரப்பதம் குறித்தும், அவுட் ஃபில்டின் தன்மை குறித்து அறிந்த பின்னரே போட்டி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது

இதையும் படிங்க: கேப்டன் கூல்-ஐ சந்தித்த மினிஸ்டர் கூல்!

ABOUT THE AUTHOR

...view details