தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அஷ்வினுக்கு கரோனா பாதிப்பு! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் - இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு கரோனா பாதிக்கப்பட்டு இருப்பதால் , அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது

ashwin tests positive for corona
அஷ்வினுக்கு கரோனா

By

Published : Jun 21, 2022, 5:45 PM IST

இந்திய அணி , இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்டில் விளையாட அந்நாட்டிற்கு சென்றுள்ளது . முதற்கட்டமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வில் இருந்த வீரர்களான ரோகித் சர்மா, கோலி , ஜடேஜா , பும்ரா , முகமது ஷமி ஆகியோர் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர்.

தொடரை முடித்துக் கொண்டு இங்கிலாந்து புறப்பட்ட ரிஷப் பந்த் , ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடனும் அஷ்வின் செல்லவில்லை. இதனால் அஷ்வினுக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து விளக்கமளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் , கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் அஷ்வின் அணியுடன் இங்கிலாந்து செல்லவில்லை எனவும் குணமான பின்னர் அஷ்வின் அங்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

போட்டி ஜூலை 1ம் தேதி தொடங்குவதால் , அஷ்வின் பங்கேற்பது சந்தேகம் தான் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி லீசெஸ்டர்ஷைர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.

ABOUT THE AUTHOR

...view details