லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரின் நான்காவது போட்டி நேற்றைய முன்தினம் (ஜூலை 19 தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து நேற்று (ஜூலை 20) ஆடிய ஆஸ்திரேலியா அணி 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக லபுசன் 51, மிட்செல் மார்ஸ் 51, ஹெட் 7 பவுண்டரிகளுடன் 48, ஸ்மித் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 41, வார்னர் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளும், மொயின் அலி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையும் படிங்க:MS Dhoni Bike Collection: தோனியின் பண்ணை வீட்டில் உள்ள பைக்குகள்.. வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
இதனையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 9 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்பு வந்த மொயின் அலி ஜாக் கிராலியுடன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்த நிலையில், ஸ்டார்க் பந்துவீச்சில் கவாஜாவிடம் கேச் கொடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அபாரமாக விளையாடிய கிராலி தனது சதத்தை பதிவு செய்தார்.
ஜாக் கிராலி 21 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸருடன் 189 ரன்கள் எடுத்த நிலையில் கேமரான் கிரீனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவருடன் இணைந்து விளையாடிய ஜோ ரூட் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சஸரும் அடித்து 84 ரன்களுக்கு அவுட் ஆனார். இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 72 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 384 எடுத்து 67 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
பென் ஸ்டோக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களும், புரூக் 14 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கேமரான் கிரீன் தலா 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர். மேலும், இந்த ஆட்டத்தின் மூலம் மொயின் அலி டெஸ்ட் கிரிகெட்டில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 200க்கும் மேல் விக்கெட் எடுத்த 16வது வீரர் என்ற சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:IND VS WI : ரோகித், ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசல்... இந்தியா நிதான ஆட்டம்!