லண்டன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி லண்டன் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா அணி 263 ரன்கள் ஏடுத்து ஆட்டமிழந்த நிலையில், அதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது நாள் ஜோ ரூட் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கம்மின்ஸிடம் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஜானி பேரிஸ்டோவ் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் களம் இறங்கிய மொயீன் அலி 21 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 10 ரன்களும், மார்க் வுட் 24 ரன்களும் ஸ்டூவர்ட் பிராட் 7 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
கடைசி விக்கெட்டாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து தனது முதல் இன்னிங்கிஸில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் மிட்செல் மார்ஸ் மற்றும் மர்ஃபி தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
26 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் 1 ரன் எடுத்த நிலையில், ஸ்டூவர்ட் பிராடிடம் தனது விக்கெட்டை கொடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு ஏமாற்றம் அளித்தார். அதன் பின் லபுசன் - கவாஜா கூட்டணி ஓரளவு கைகொடுத்தது. லபுசன் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களும், கவாஜா 3 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.