தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வீறுநடைபோடும் ஆப்கானிஸ்தான்... அரைஇறுதிக்கு தகுதி பெறுமா?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை வெற்றி கண்ட ஆப்கானிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அரைஇறுதி சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் அணியால் செல்ல முடியுமா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

Afghanistan
Afghanistan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 6:37 PM IST

ஐதராபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், நேற்று (அக். 23) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைத்தது.

முன்னதாக கடந்த 15ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. 4 ஆட்டங்களில் விளையாடி இரண்டில் மட்டும் வெற்றி பெற்று இருந்தாலும், 1992 ஆம் ஆண்டு உலக சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து என இரண்டு பிரதான அணிகளை வீழ்த்தி கிரிக்கெட் அரங்கில் அனைத்து தரப்பினரையும் தன் பக்கம் ஈர்த்து உள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

இரண்டு வெற்றிகள் மூலம் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தை பிடித்து இருந்தாலும், வங்கதேசம், நெதர்லாந்து, இலங்கை, இங்கிலாந்து என பிரதான அணிகளை பின்னுக்கு தள்ளி உள்ளது ஆப்கானிஸ்தான். இரண்டு பெரிய வெற்றிகள் மூலம் நம்பிக்கை பெற்று உள்ள ஆப்கான் வீரர்கள் அரைஇறுதி சுற்றுக்குள் நுழைவார்களா என்று வினவினால் அது சந்தேகம் தான்.

ஆப்கானிஸ்தான் அணி தனது அடுத்தடுத்த ஆட்டங்களில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இவ்விரு ஜாம்பவான்களை சமாளிக்கும் பட்சத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி வேட்கையை யராலும் தடுக்க முடியாது என்றால் அது மிகையாகாது.

சுழற்பந்து வீச்சில் பலம் வாய்ந்ததாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் அணியில் ரசித் கான், முஜிப் உர் ரஹ்மான், முகமது நபி போன்ற உலக தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். வரும் அக்டோபர் 30ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி.

அதைத் தொடர்ந்து நவம்பர் 3ஆம் தேதி லக்னோவில் நெதர்லாந்து அணியையும், அடுத்தடுத்து நவம்பர் 7ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் நவம்பர் 10ஆம் தேதி அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்க அணியையும் ஆப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது. விளையாட்டை பொறுத்தவரை எப்போது என்ன வேண்டுமானாலும் நிகழலாம். அதன்படி, எதிர்வரும் ஆட்டங்களில் வென்று ஆப்கானிஸ்தான் அணி அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெறலாம்.

இதையும் படிங்க :உலக சாம்பியனுக்கு நேர்ந்த கதி! வீழ்ச்சியில் இருந்து மீளுமா இங்கிலாந்து?

ABOUT THE AUTHOR

...view details