சென்னை: உலகக் கோப்பை தொடரில் 22வது லீக் போட்டி நாளை (அக்.23) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் கோதாவில் இறங்குகின்றன. இந்த தொடர் முழுவதும், ஆப்கானிஸ்தான் சிறந்த அணி என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதே போல், பாகிஸ்தான் அணியும், உத்வேகத்துடன் விளையாடி வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட்- 2023 தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரானது, நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து என 10 நாடுகள் பங்கேற்றுள்ளது.
உலக கோப்பை 2023இன் 22வது லீக் ஆட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. 11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தான் அணியும், தங்கள் அணி சிறந்தது என நிரூபிக்க இங்கிலாந்து அணியுடன் ஆடிய ஆட்டத்தில் வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியானது நியூஸிலாந்து அணியை வெல்ல முடியவில்லை என்றாலும், ரசிகர்கள் மனதில், ஒரு சிறப்பான அணி என்ற அந்தஸ்தத்தை பெற்றது.
மேலும் அக்.,18ஆம் தேதி அன்று நடைபெற்ற நடைபெற்ற போட்டியின் போது ரசிகர் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என்று கூறியது நாம் தற்போது நினைவுகூர்ந்து பார்ப்பது அவசியம். மேலும் ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக் ஆகிய வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி உள்ளதால் அவர்களுக்கு சென்னை மைதானம் மிகவும் பழக்கப்பட்டதாகவே இருக்கும்.
மேலும், பாகிஸ்தான் அணியானது 11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் விளையாடுவதால், அவர்கள் எப்படி சென்னை மைதனாத்தை கையாள்வது என்பது குறித்து பயிற்சியின் ஆட்டத்தின் போது தான் தெரியும். இம்முறை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு வாய்புகள் இருந்தாலும், கிரிக்கெட்டை பொருத்த வரை 50 ஓவர்களில் 300 பந்துகள் இருந்தாலும், ஆல்-அவுட் ஆவதற்கு பத்து பந்துகள் போதுமானது. அந்த பத்து பந்துகள் யாரு சாதகமாக இருக்கிறது என்பது நாளைய ஆட்டத்தில் தான் தெரியும்.
பாகிஸ்தான் vs ஆப்கானுஸ்தான்:பாகிஸ்தான் அணியானது, 1975ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இருந்து, 2019 வரை உலக கோப்பை போட்டியில் மொத்தம் 80 ஆட்டங்கள் நடைபெற்றது. இதில், 45 ஆட்டங்களில் வெற்றியும், 32 போட்டிகளில், தோல்வியும், 3 போட்டியும் முடிவில்லாதாக இருந்து உள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியானது, 1992ஆம் ஆண்டு உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதே போல், 1999 ஆண்டு இரண்டாவது இடத்தையும் பிடித்தது. ஒவ்வொறு உலக கோப்பை போட்டியின் போதும், பாகிஸ்தான் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் 1979, 1983, 1987, 2011 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. மேலும் 1996, 2015 ஆகிய ஆண்டுகளில் காலிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றது.
இதேப்போல், ஆப்கானிஸ்தான் அணி முதன் முதலில், 2015ஆம் ஆண்டு முதன்முதலில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடியது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி இது வரை உலக கோப்பை வரலாற்றில், 2015, 2019 ஆகிய இரண்டு உலகக் கோப்பையில் நடைபெற்ற ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. அத்துடன், நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் 13வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின.
டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கன் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியானது, ஆப்கானிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது. மேலும், இந்த வெற்றி மூலம் இந்த அணியின் மீது உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை திரும்பி உள்ளது. மேலும் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடினாலும், இல்லை ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடினாலும், சென்னையில், சிறந்த தனிக்கு அரசியல் சாயல் இல்லாமல் தங்கள் வாழ்த்துகளை தெரிவிப்பார்கள்.
சிறந்த பந்துவீச்சாளர்கள்:பாகிஸ்தான் அணியில் ஷாஹின் அப்ரிடி, ஹசன் ஹலி, ஹரிஸ் ராவுஃப், போன்ற திறமையான பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அணியிலும் திறமையான பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
சென்னை ஆடுகளம்:சேப்பாக்கம் மைதானம் என்றால், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று அனைத்து தரப்பினரின் கருத்தாகும். மேலும், இந்த ஆடுகளம் பிளாக் சாயில் எனப்படும் கருப்பு மண்ணால், உருவாக்கபட்ட ஆடுகளம். இந்த ஆடுகளம் என்பது முதல் 10 ஓவர்கள் வரை பேட்ஸ்மேன்கள் விளையாடுவது கடினமாக இருக்கும். அதனால் நாளைய ஆட்டம் யாருக்கு சாதகம் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: Pakistan Vs Afghanistan : சென்னை வந்த பாகிஸ்தான் வீரர்கள்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!