பெங்களூரு: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரின் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று இத்தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டி நடைபெறுகிறது.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கு தற்போது டாஸ் வீசப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்யக் களம் இறங்குகிறது.
இப்போட்டியில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனும், பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியில் நூர் அகமத், முஜிப் உர் ரகுமான், நவின் உல் அக், ஃபசல்ஹக் பாரூக்கி ஆகியோர் நீக்கப்பட்டு, ஷரபுதீன் அஷ்ரப், கைஸ் அகமது, முகமது சலீம் சஃபி மற்றும் ஃபரீத் அகமது மாலிக் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டியையுமே இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.