அபுதாபி: கிரிக்கெட் விளையாட்டில் வேகமான வடிவமான அபுதாபி டி10 தொடர் நாளை (நவம்பர் 28) தொடங்கிறது. இந்த தொடரானது வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்களா டைகர்ஸ், சென்னை பிரேவர்ஸ், டெல்லி புல்ஸ், டெக்கான் கிளாடியேட்டர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இத்தொடரில் ஒவ்வொறு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் நான்கு இடத்திற்கு முன்னேறும் அணிகள் அரையிறுதியில் மோதிக்கொள்ளும். இதற்கிடையில் ஐபிஎல் தொடர் போலவே இந்த தொடரிலும், அணியின் வீரர்களை தக்கவைத்து கொள்வதும், விடுவிப்பதுமான டிரேடிங் முறை நடைபெற்றது.
அதில் நடப்பு சாம்பியனான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனான நிக்கோலஸ் பூரனை அந்த அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேபோல், கடந்த சீசனில் ரன்னர் அப்பான நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி மற்றும் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணியும் முறையே கீரன் பொல்லார்ட் மற்றும் மொயீன் அலியை தங்களது கேப்டனாக இந்த ஆண்டும் தொடர்கிறது.