தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2வது டி20 போட்டி; இறுதியில் அதிரடி காட்டிய முஜீப் உர் ரஹ்மான்.. இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்கு! - அண்மைச் செய்திகள்

IND VS AFG: இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

ind vs afg
ind vs afg

By PTI

Published : Jan 14, 2024, 7:08 PM IST

Updated : Jan 14, 2024, 8:51 PM IST

இந்தூர்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது.

அதன்படி கடந்த 11ஆம் தேதி முதல் போட்டி நடைபெற்று அதில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி இன்று நடைபெற்று வருகின்றது. இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் முறையே 48, 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து களம் கண்ட வீரர்களில் குல்பாடின் நைப்பை தவீர்த்து மற்ற அனைவரும் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அஸ்மத்துல்லா உமர்சாய் 2, முகமது நபி 14, நஜிபுல்லா சத்ரன் 23, கரீம் ஜனத் 20, முஜீப் உர் ரஹ்மான் 21 ரன்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்பாடின் நைப் 35 பந்துகளில் 5 ஃபோர்கள், 4 சிக்சர்கள் உட்பட 57 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், ரவி பிஸ்னொய் மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்களும், சிவம் துபே 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

ஆப்கானிஸ்தான்: இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், குல்பாடின் நைப், நூர் அஹ்மத், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான்.

இதையும் படிங்க:இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. எல்.முருகன் இல்ல பொங்கல் விழாவில் தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

Last Updated : Jan 14, 2024, 8:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details