தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"விரைவில் அக்ஸர் பட்டேல் இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க வேண்டும்" - அஸ்சர் பட்டேலின் சகோதரர் கருத்து! - அக்ஸர் பட்டேல்

ETV BHARAT EXCLUSIVE: காயம் காரணமாக உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விலகிய அக்ஸர் பட்டேல் குறித்து அவரது சகோதரர் சன்சிப் பட்டேல் ஈடிவி பாரத்திடம் பகிர்ந்து கொண்ட பிரத்தியேக தகவல்.

அக்சர் பட்டேலுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்திருக்கும்
அக்சர் பட்டேலுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்திருக்கும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 10:29 PM IST

அகமதாபாத் (குஜராத்): அக்ஸர் பட்டேல் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணிக்கு, சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவும், நல்ல பேட்ஸ்மேனாகவும் ஒரு முக்கிய வீரராக திகழ்ந்து வந்தார். ஆசியக் கோப்பை போட்டிகளில் வங்கதேசம் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் எற்பட்ட காயம், இவரை உலகக் கோப்பை அணியில் இருந்து விலகக் காரணமாக மாறியது.

குறிப்பாக அக்ஸர் பட்டேல், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மற்ற வெளிநாட்டு வீரர்களின் பலவீனங்களை அறிந்திருக்கக் கூடும் என கருதப்படுகிறது. மேலும், ஆசியக் கோப்பை போட்டிகளிலும் சிறந்த பந்து வீச்சு, சிறந்த பேட்டிங் என சிறப்பாக விளையாடி வந்தார், அக்ஸர் பட்டேல்.

தற்போது தனக்கு இடது கால் தசையில் ஏற்பட்ட காயங்களுக்கு, பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அக்ஸர் பட்டேல் குறித்து அவரது சகோதரர் சன்சிப் பட்டேல் ஈடிவி பாரத்திடம் கூறும்போது, "2023ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டிகள் அக்ஸர் பட்டேல் தனது திறைமைகளை நிரூபிக்க, ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்திருக்கும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "உலகக் கோப்பை அணியில் சாஹலை தேர்வு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" - யுவராஜ் சிங்

தொடர்ந்து பேசிய அவர், "அக்ஸர் பட்டேல் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால், ஒரு ஆட்டம் கூட அவர் விளையாடவில்லை. தற்போது இந்த ஆண்டிற்கான அணியில் இருந்து காயம் காரணமாக வெளியேறி உள்ளார். இது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கக் கூடியதாக உள்ளது.

நாங்கள் அக்ஸரின் விளையாட்டைக் காண எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். குறிப்பாக அகமதாபத் மைதானத்தில் விளையாடும் ஆட்டத்தை காண மிகவும் எதிர்பார்ப்போடு இருந்தாம். ஆனால், அக்ஸர் அணியில் இருந்து வெளியேறியது எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. விரைவில் அக்ஸர் பட்டேல் இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க வேண்டும் என்பதே எங்களின் ஆசை" என அக்ஸர் பட்டேலின் சகோதரர் சன்ஷிப் பட்டேல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அக்ஸர் பட்டேலுக்கு பதிலாக அஸ்வின் தேர்வானது எப்படி? - பிசிசிஐ அதிகாரியின் சிறப்பு பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details