இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத தருணங்கள் என்றால் அவை ஏராளம். தருணங்கள் எப்படி வரலாற்றில் நிலைத்து நிற்கிறதோ, அவை நிகழ்ந்த தேதிகளும் நம் நினைவில் தங்கிவிடுகின்றன.
1983 ஜூன் 18இல், முதல்முறையாக இந்திய உலகக்கோப்பையை வென்றது, 1992 ஏப்ரல் 22ல் சார்ஜா மைதானத்தில் சச்சினின் சூறாவளி ஆட்டம் (131 பந்துகளில் 143 ரன்கள்), 2003 ஜூலை 13இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக கங்கலியின் படை நாட்-வெஸ்ட் தொடரை வென்றது, 2011 ஏப்ரல் 2இல் இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது என இந்த அனைத்து தேதிகளும் ஒவ்வொரு ரசிகரும் தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட மறக்காமல் சொல்வார்கள்.
இதேபோன்று, நினைவில் வைத்துக்கொள்ள விரும்பாத சம்பவங்களின் தினங்களும் அப்படியே நம்மிடம் தங்கிவிடுகின்றன. அப்படி, சமீபத்தில் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பாத சம்பவம் என்றால், அது 2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக போட்டியில் தோனி ரன்-அவுட்டான சம்பவம் தான்.