கரோனா வைரஸ் தொடர்பாக 'I Retire' என்ற தலைப்பில் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் பிவி சிந்து சர்வதேச பேட்மிண்டனிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக பலரும் தவறாகப் புரிந்துகொண்டு சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர்.
பிவி சிந்து 'I Retire' ட்வீட்; அதிர்ந்த மத்திய அமைச்சர்..! - பிவி சிந்து ஓய்வு
'I Retire' ட்வீட் மூலம் பிவி சிந்து தனக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்ற செய்தி பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், ''நீங்கள் எனக்கு சின்னதாக அதிர்ச்சியை கொடுத்துவிட்டீர்கள். உங்களின் ஆற்றல், திறன் ஆகியவை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவுக்காகப் பல பதக்கங்களை வெல்லும் திறன் உங்களிடம் உள்ளது என்று நம்புகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:#ThankYouWatson ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த ஷேன் வாட்சன்!