சுவிட்சர்லாந்தின் பேஸல் நகரில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி. சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள பி.வி.சிந்துவிற்கு அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், "பி.வி.சிந்து தங்கம் வென்றதன் மூலம் இந்திய நாடே பெருமைப்பட்டுள்ளது. உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு வாழ்த்துகள்" என்றார் .