தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தாய்லாந்து ஓபன்: இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய இந்திய இணை! - அஸ்வினி பொன்னப்பா

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் கலப்பு இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சத்விக்சைராஜ் ரங்கிரெட்டி இணை வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.

Watch: Thailand Open kicked off amid withdraw of Indian players
Watch: Thailand Open kicked off amid withdraw of Indian players

By

Published : Jan 12, 2021, 4:15 PM IST

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று (ஜன.12) தொடங்கியது. இதில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் இன்று அஸ்வினி பொன்னப்பா, சத்விக்சைராஜ் ரங்கிரெட்டி இணை, இந்தோனேசியாவின் ஹபீஸ் பைசல் மற்றும் குளோரியா இமானுவேல் இணையை எதிர்கொண்டது.

பரபரப்பான இப்போட்டியின் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பொன்னப்பா இணை முதல் செட்டை 21-11 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரண்டாம் செட்டை 29-27 என்ற கணக்கில் போராடி இழந்தது. இதனால் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய இந்திய இணை

பின்னர் கடைசி செட்டை இந்தியாவின் பொன்னப்பா இணை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தோனேசியாவின் ஹபீஸ் பைசல் இணையை வீழ்த்தி, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்

ABOUT THE AUTHOR

...view details